காஷ்மீர் கோட்டம்
காஷ்மீர் கோட்டம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப்பகுதியின் இரண்டு நிர்வாகக் கோட்டங்களில் ஒன்றாகும். இக்கோட்டத்தின் தலைமையிடம் சிறிநகர் ஆகும். இக்கோட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளது. இக்கோட்டத்தின் தெற்கில் ஜம்மு கோட்டம், மேற்கிலும், வடக்கிலும் ஆசாத் காஷ்மீர் & வடக்கு நிலங்கள் உள்ளிட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும், கிழக்கில் லடாக் ஒன்றியப் பகுதியும் எல்லைகளாக உள்ளது. காஷ்மீர் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்கள் அனந்தநாக், பாரமுல்லா, சோப்பூர் மற்றும் குல்காம் ஆகும்.
Read article



